பிரபலமான பதிவுகள்
வட்டார இலக்கியம்
மக்களின் பேச்சு மொழி ஓசை ஒழுங்கு, லயம், இழுவை, இசைத்தன்மை எனப் பல இணைந்து வெளிப்படுகிறது. இந்த ஓசை ஒழுங்கு எதுகை, மோனையாய் சொற்பிரயோகங்களில் ஒலித்தது. “எண்ணைக்குடம் போட்டவளும் ஆத்தாடி அம்மாடி தண்ணிக்குடம் போட்டவளும் ஆத்தாடி அம்மாடி” சொலவமாக வெளிப்பட்டிருப்பினும், எதுகை,மோனையுடன் ஒரு கவிதையாக நிற்கிறது. இதன் மொழிப்பண்பு நோக்கி பேச்சோசைக் கவிதை எனச் சொல்லலாம். “அறுக்கமாட்டாதவன் இடுப்பில அறுத்தெட்டுப் பண்ணரிவாள்” இரண்டு சொலவடைகள் போதும் எடுத்துக்காட்டுக்கு. இணைவு, எதிர்வு (முரண்), லயம், ஓசை ஒழுங்கு என மக்களின் நா வழக்கிலுள்ள இவைகளிலிருந்து எழுத்து வடிவக் கவிதை எடுத்துக் கொள்கிறது. எடுத்துக் கொண்டது என்பதினும் கடன்வாங்கிக் கொண்டது என்ற வார்த்தை பொருத்தமாய் அமையும். கவிதை மரபு எல்லாக் காலத்திலும் ஏதேனும் ஒரு கூறினை நாட்டுப்புற வழக்காறு எனப்படும் வாய்மொழியிலிருந்து கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது. சங்க காலக் கவிதைக் கருவூலத்தில் எதுகை, மோனை என்ற ஓசை ஒழுங்கு பிரதானமாக இருக்கவில்லை; அதன் பின்னரான கவிதைகள் எதுகை மோனை என்ற ஆடை உடுத்திக்கொள்கின்றன. இதுவரை ஆடை அணியாதிருந்த கவிதை மரபுக்க
நா.காமராசன் ஓய்ந்த நதியலை
1962 - 63ல், மதுரை தியாகராசர் கல்லூரியில் நான் இளங்கலை முதலாமாண்டு. கவிஞர் நா.காமராசன், இளங்கலை இரண்டாமாண்டு. கவிஞர் அபி, இளங்கலை மூன்றாமாண்டு. கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், முதுகலைத் தமிழ் இறுதியாண்டு. கவிஞர் இன்குலாப், எனக்குப் பின்னால் அடுத்த ஆண்டு இளங்கலைத் தமிழில் சேர்கிறார். அவருடைய வகுப்புத் தோழர் – பின்னாளில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்து மறைந்த கா.காளிமுத்து. மதுரை தியாகராசர் கல்லூரி விடுதியில் 1965 சனவரி 25-ம் நாள், இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி, உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் முன் ஆலோசிப்பு நடந்தது. நண்பர்கள் காமராசன், காளிமுத்து ஆகியோர், ‘இந்தியே ஆட்சி மொழி’ என்று அறிவிக்கும் சட்டப் பிரிவு பிரதியை எரிப்பதென முடிவு செய்தனர். ‘சட்டத்தை’ எரிக்கும் நண்பர்களை அக்காரியம் நிறைவேற்றும் முன் கைது செய்யாமலிருக்க, ஒரு தலைமறைவு வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தினோம். எங்களில் சிலரைத் தவிர அந்த இடம் வேறு யாருக்கும் தெரியாது. சனவரி 25-ம் நாள் அன்று மாணவர்கள் சுற்றிலும் பாதுகாப்பாக வர, காமராசனும் காளிமுத்துவும் திடல் மேடையில் ஏறி, சட்டப
ஜெயந்தன் - நினைக்கப்படும்
மதுரை வடக்கு மாசி வீதியில் பேரா.துளசிராமசாமியின் ‘அரூசா’ அச்சகத்தின் படியில் அவர் நின்று கொண்டிருந்தார். நிஜ நாடக இயக்கம் பேரா.மு.ராமசாமியின் ‘விழிகள்’ மாத இதழும் அச்சாகியதால் மு.ரா.வும் இருந்தார். மதுரையில் கோயில்களுக்கும் சாமி வலங்களுக்கும் குறைவில்லை. முன் மாலையை லேசாய் அசைத்துத் தள்ளியபடி இரவு பின்னால் மெதுவாக வந்தது. அது குளிர்காலமில்லை. கோடைகாலம். மதுரைக் கோடையில் இரவு அப்படித்தான் ஆடி அசைந்து வரும். ‘பெட்ரோமாக்ஸ்’ – விளக்கு வெளிச்சத்தில் வடக்கு மாசி வீதியில், கிழக்கிலிருந்து மேற்காக ‘அம்மன்’ சப்பரத்தில் வந்து கொண்டிருந்தாள். ஒவ்வொருவரது கைகளும் கன்னங்களும் இதற்காகவே இருப்பது போல் கூப்புவதும் கன்னத்தில் போடுவதுமாய் இருந்தார்கள். “எவ்வளவு பெரிய தேர். எத்தனை பெரிய கூட்டம். இவ்வளவு பெரிய தேரில் அம்மன் உரு மட்டும் கண்ணுக்குத் தெரியலே. இந்த மனுசப்பயல்களைப் பார்த்து பயந்து ஒரு மூலையில் ஒடுங்கி உக்காந்திட்டா போல” - அவர் பேசினார். கூட்டத்திலிருந்து அவர் பேச்சு விலகியதாய்க் காணப்பட்டது. எதுவொன்றையும் பொதுப்புத்திப் பார்வையிலல்லாமல் புதிய கோணமாய் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருந்
பாரதிபுத்திரன் என்ற மானுடன்
அது ஒரு துணிச்சலான காரியம். மாலைமயங்கும் வேளை திருவல்லிக்கேணியிலுள்ள அச்சகத்திலிருந்து ‘மனஓசை’ என்ற கலை, இலக்கி இதழின் 2000 படிகளுள்ள கட்டுக்களை ஏற்றிக் கொண்டு ரிக்ஷா பச்சையப்பன் கல்லூரி வாசலில் நுழைந்து மாணவர் விடுதிக்குச் சென்றது (அக்காலத்தில் ’தானி’ என்று சொல்லப்படும் ஆட்டோக்கள் இல்லை). கல்லூரி விடுமுறைக் காலம்: வெளிச்சப் புள்ளிகள் ஓரிரு அறைகளில் அசைந்தன. ’மனஓசை இதழ்களை’ அஞ்சல் மூலம் அனுப்பும் பணி முதலில் என் வீட்டில் நடந்தது. வீடு சென்னை அமைந்தகரையிலிருந்தது; ஒற்றை அறை கொண்ட வீடு. அமைந்தகரை பேருந்து நிறுத்தத்துக்கு அடுத்த பேருந்து நிறுத்தம் பச்சையப்பன் கல்லூரி. மாலை வேளையில் எங்களுடன் மாணவ நண்பர்களும் இணைந்து ’மனஓசை’ இதழ்களை அஞ்சலில் அனுப்ப விடுதி பொருத்தமாயிருந்தது. ஏதேனும் ஒன்று நிகழ்ந்த பின், இப்படி செய்திருந்தால் இது நிகழ்ந்திருக்காதே என்ற யோசிப்புத் தோன்றுகிறது: அப்படித்தான் அன்றைய நிகழ்வும் நடந்தது. நிகழ்ந்த ஒன்று எப்போதும் தனக்குரிய செயல்களில் தீவிரமடைந்துவிடும். பாதகமானதும் சாதகமானதுமான விளைவுகள் வந்தடையும். அவர் விடுதியின் முதிய காவலாளி, பார்வையற்றவர்: கைத்தடியால
கருத்துகள்
கருத்துரையிடுக