கலைஞன் சுதந்திரம்

சிற்ப விநோதங்களைச் செய்து காட்டுகிறவர்களுக்கு, பரிசு என்று அரசன் அறிவித்தான்.

ஒரு சிற்பி மன்னனின் சிலையை நேர்த்தியான முறையில் செய்து வந்திருந்தான். மன்னனுக்குப் பிடித்து விட்டது; மன்னன் சொன்னான்

"மக்கள் பெருந்திரளாக வரும் கோயிலில் கொண்டுபோய் வையுங்கள், மக்களனைவரும் கண்டு மகிழ்ச்சி கொள்ளட்டும்"

சிலையில் சிற்பி, ஒரு சின்ன சிற்பவிநோதம் பண்ணியிருந்தான். சிலையின் மூக்கு வழியே குச்சி விட்டால் காது வழியே வந்தது, காது வழியே விட்டால் வாய்வழியே வந்தது.

மக்கள் எல்லோரும் இந்த வேடிக்கையை ரசித்தார்கள். குச்சி போட்டுப் பார்க்க எக்குத் தப்பான கூட்டம் கூடியது.

அரசன் காதுகளுக்கு சேதி எட்டியது. சிற்பியை அழைத்து வரச் சொன்னான்.

"மன்னனைப் போற்றிப் பாராட்டத்தான் கலைகளே தவிர மன்னனை, கிண்டல் செய்வதற்கு அல்ல. நேரடியாகவோ, மறைமுகமாகவோ மன்னனை கிண்டல் செய்வதோ, கேலி செய்வதோ ராஜத் துரோகக் குற்றம். இவனைச் சிறையிடையுங்கள்"

- சூரியதீபன்
- மனஓசை - பிப்ரவரி 1982

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி