முன்னைய நாட்களில் முதுகலைத் தமிழ் பயின்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். முதுகலை வகுப்புச் சேர்க்கையிலிருந்து அது தொடங்குகிறது. ஆங்கில இலக்கியப் பிரிவு மீதான மோகம் தமிழிலக்கியத்தின் பால் உருவாகவில்லை. மோகம் என்ன, அந்தக் கிறுக்கில் சிறுதுளியளவும் தாய்மொழிக்கென முளைவிட்டதில்லை. நாட்டர் வழக்கில் சொல்வதாயின், ஆங்கில இலக்கியப் பிரிவுக்கு ’மவுஸ்’ கூடுதல். தமிழ் இலக்கியப் பிரிவு காற்றோட்டமாய் இருந்தது. எந்தப் பிரிவும் கிடைக்காதவர்கள் தமிழ்ப் பிரிவில் வந்து சேருவார்கள். முதுகலைத் தமிழில் எங்களுடன் ஒரு கூடைப் பந்தாட்ட விளையாட்டுக்காரர் (Basket Ball Player) பயின்றார். அவருக்கு தாய் மொழி தமிழ் அல்ல; சௌராட்டிரம் அவருடைய தாய்மொழி. மதுரைநகரில் தெற்கு மாசி வீதிகளை உள்ளடக்கிய வட்டாரத்தில் வாழும் பட்டுநூல்காரர்கள் (பட்டுநூல் நெசவாளிகள்) என்றழைக்கப்படும் சௌராட்டிர இனத்தைச் சேர்ந்தவர். அவர் போல் வேறு பாடப்பிரிவில் இடம் கிடைக்காத - தொலைபேசி அலுவலகத்தில் பணி செய்யும் ஒருவர் எங்களுடன் முதுகலைத் தமிழ் பயின்றார்: ஒரு துறையில் பணியாளராக இருந்து கொண்டு, அதி...
கருத்துகள்
கருத்துரையிடுக