ஆய்வு: பா.செயப்பிரகாசம் படைப்புகளில் சமூகச் சிந்தனைகள்


ஆய்வாளர்:
மு.அம்பிகா, தமிழ்மொழித் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், ஆகஸ்ட் 2022

மேற்பார்வையாளர்: முனைவர் வே.நிர்மலர் செல்வி, உதவிப்பேராசிரியர், தமிழ்மொழித் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்

ஆய்வு நோக்கம்: பா.செயப்பிரகாசம் படைப்புகளில் வெளிப்படும் சமூகச் சிந்தனைகளைப் பதிவு செய்வதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகின்றது.


இயல் ஒன்று: ’பா.செயப்பிரகாசம் அவர்களின் படைப்பு வெளி’ எனும் முதல் இயலில் படைப்பாளரின் வாழ்வியலும் அவரின் படைப்பும்  படைப்பின் தன்மையும் விரிவான முறையில் பதிவு செய்யப்படுகின்றன.

இயல் இரண்டு: ’பா.செயப்பிரகாசம் படைப்புகளில் சமூகம் மற்றும் பண்பாடு’ எனும் இரண்டாவது இயலில் அவரின் படைப்புகளில் வெளிப்படும் சமூகநிலை, சூழல், இயக்கம், பண்பாடு போன்றவை விரிவான முறையில் ஆராயப்படுகின்றன.

இயல் மூன்று: ’பா.செயப்பிரகாசம் படைப்புகளில் பெண்ணியம்‘ எனும் மூன்றாவது இயலில் சமூகத்தின் ஒரு பாதியான பெண்ணினத்தின் சிக்கல்கள் அவற்றை எதிர்கொள்ளும் நிலைகள் போன்றவை அவரின் படைப்புகளில் ஒன்றாக அமைகின்றன.

இயல் நான்கு: 'பா.செயப்பிரகாசம் படைப்புகளில் வெளிப்படும் சமூகச் சிந்தனைக் கூறுகள்' எனும் நான்காவது இயலில் இன்றையச் சமூகம் எதிர்கொள்ளும் முரண்பாடுகள் அனைத்தும் அவரின் படைப்புகளில் எதிரொலிக்கும் நிலைகளைச் சொல்வதோடு மட்டுமல்லாது அவற்றின் அடிப்படைக் காரணிகளை வெளிப்படுத்தும் வகையில் இவ்வியல் அமைகின்றன.

முடிவுரை: அனைத்து  இயல்களிலும் கண்டறியப்பட்டக்  கருத்துகள் அனைத்தும் முடிவுரையில் வகுத்தும் தொகுத்தும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பலியாடுகள்